/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜமீன் பல்லாவரம் அரசு பள்ளியில் மெய்நிகர் தொழில்நுட்ப ஆய்வகம்
/
ஜமீன் பல்லாவரம் அரசு பள்ளியில் மெய்நிகர் தொழில்நுட்ப ஆய்வகம்
ஜமீன் பல்லாவரம் அரசு பள்ளியில் மெய்நிகர் தொழில்நுட்ப ஆய்வகம்
ஜமீன் பல்லாவரம் அரசு பள்ளியில் மெய்நிகர் தொழில்நுட்ப ஆய்வகம்
ADDED : செப் 16, 2025 11:58 PM

பல்லாவரம்:ஜமீன்பல்லாவரம், பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் வசதிக்காக, 92 லட்சம் ரூபாய் செலவில், ஏ.ஆர்., எனப்படும், மெய்நிகர் தொழில்நுட்ப ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டலம், 17வது வார்டு, பொன்னியம்மன் கோவில் தெருவில், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு, சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த, 1,424 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவர்களின் வசதிக்காக, ஏ.ஆர்., - வி.ஆர்., எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்ப ஆய்வகம் கட்ட திட்டமிடப்பட்டது.
அதன்படி, 92 லட்சம் ரூபாய் செலவில், இரண்டாவது தளத்தில் இந்த ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, 6 - 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, கணிதம் , அறிவியல், கணினி அறிவியல், வேதியியல் பாடங்கள், மெய்நிகர் தொழில்நுட்ப வசதியுடன் கற்றுத்தரப்படும்.
இதன் மூலமாக, மாணவர்கள் எளிய முறையில் பாடங்களை புரிந்து, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். பணிகள் முடிந்ததை அடுத்து, இந்த ஆய்வகத்தை, நகராட்சி அமைச்சர் நேரு, வரும் 19ம் தேதி பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.