/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்
/
பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்
பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்
பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்
ADDED : டிச 12, 2025 06:25 AM

செங்கல்பட்டு: எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி குறித்து, அரசியல் கட்சிகளால் நியமனம் செய்யப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை முகவர்களுடன் கலந்தாலோசனை கூட்டம், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு மேற்பார்வையாளர் ராமன்குமார் தலைமை வகித்தார்.
இதில் மாவட்ட கலெக்டர் சினேகா, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், சப் - கலெக்டர் மாலதி ெஹலன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், அரசியல் கட்சியினர் பேசியதாவது:
மதுராந்தகம் நகர தி.மு.க., செயலர், குமார்: எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொண்டதற்கு, தி.மு.க., தலைவர் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.தி.மு.க., வழக்கறிஞர் விநாயகம்: சட்டசபை தொகுதியில், வாக்காளர்கள் சேர்க்கை படிவம் 6 வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை ஒருவரே அதிகமான விண்ணப்பங்களை கொண்டு வந்தால், ஏற்றுக்கொள்ளக் கூடாது. தனித்தனியாக வாக்காளரிடம் விண்ணப்பங்கள் பெற வேண்டும். 18 வயது உள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எஸ்.ஐ.ஆர்., பணியில், இரவு 9:00 மணிக்கு மேலும், அனைத்து நிலை அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட்டதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கலெக்டர் சினேகா: வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தால், மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு, 6வது படிவம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து கொடுத்தவர்கள், அனைவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படும்.
வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு, படிவம் 6 விண்ணப்பம், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஓட்டுச்சாவடி மையங்களில், சிறப்பு முகாம் நடத்தப்படும்.
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அரசியல் கட்சியினரும், மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் பேசினர்.

