தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது

 ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது

 ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது


ADDED : ஏப் 23, 2026 10:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 10:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பவுஞ்சூர்:வேட்டக்கார குப்பத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானதால், வாக்காளர்கள், கடும் அதிருப்தி அடைந்தனர்.

பவுஞ்சூர் அருகே வேட்டக்கார குப்பம் ஊராட்சி உள்ளது. அங்கு 1,171 ஓட்டுகள் உள்ளன. இந்நிலையில், அங்குள்ள தொடக்கப்பள்ளியில் 127 மற்றும் 128 ஆகிய இரண்டு ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 127வது ஓட்டுச்சாவடியில் 800 வாக்காளர்களும், 128 ல் 371 வாக்களர்களும் ஓட்டு போட்டனர்.

இதுகுறித்து வாக்காளர்கள் கூறியதாவது:

குறைவான வாக்களர்கள் கொண்ட கட்டடத்தில் இரண்டு வழி பாதை உள்ளது. அதிக வாக்களர்கள் கொண்ட கட்டடத்தில் ஒரு வழிப்பாதை மட்டுமே உள்ளது. இதனால், வாக்கு செலுத்த வரிசையில் நிற்பவர்களை கடந்து வர காலதாமதம் ஆகிறது.

மேலும், 127வது ஓட்டுச்சாவடியில் திடீரென ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானது.

அதேபோல் 128வது ஓட்டுச்சாவடியிலும் இயந்திரம் பழுது ஏற்பட்டது. இதனால், அரை மணி நேரம் காத்திருந்து ஓட்டளித்தோம்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us