தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் ஒதுக்கீடு

 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் ஒதுக்கீடு

 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் ஒதுக்கீடு


ADDED : மார் 23, 2026 10:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 10:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்தனர். தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்., 23ம் தேதி நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் - தனி, மதுராந்தகம் - தனி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.

செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், சட்டசபை தொகுதிகளுக்கான, இந்திய தேர்தல் ஆணைய இணைய செயலின் மூலம், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மாலதி ெஹலன் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, மறைமலை நகர் நகராட்சி அலுவலகதத்தில் இருந்து, ஏழு சட்டசபை தொகுதிகளுக்கும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், இன்று காலை 10:00 மணிக்கு, அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us