ADDED : அக் 18, 2026 06:57 PM

அ நிறம் | அளவு
மதில் சுவர் இடிந்து ஆட்டோ சேதம்
செங்கல்பட்டு நகராட்சி,12வது வார்டு மலைப் பூங்கா மேட்டு தெருவில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், தெருவில் உள்ள ஒரு வீட்டின் மதில் சுவர் இடிந்து சாலையில் விழுந்து போக்குவரத்து தடை ஏற்பட்டது.
மேலும் இந்த மதில் சுவர் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ முழுதும் சேதமடைந்தது. வீடுகளுக்கு செல்லும் குழாய் இணைப்புகள் உடைந்து தண்ணீர் வினியோகம் தடைபட்டது. தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள், மண் சரிவு ஏற்படாதவாறு, மணல் மூட்டைகள் வைத்து தடுப்பு அமைத்தனர்.
