/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு அளவிலான கூட்டம்
/
உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு அளவிலான கூட்டம்
ADDED : அக் 26, 2025 10:10 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம் 27, 28, 29ம் தேதிகளில் நடக்கிறது.
கலெக்டர் சினேகா அறிக்கை:
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும், அடிப்படை சேவைகளை மேம்படுத்துவதற்கு, அந்தந்த வார்டு நகராட்சி கவுன்சிலர்கள் தலைமையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, அலுவலர் ஒருவரை, கூட்டுநராக கொண்டு, அவ்வார்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில், வார்டு அளவிலான சிறப்புக் கூட்டம் வரும் 27, 28, 29ம் தேதிகளில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் குடிநீர் வழங்கல், திடக் கழிவு மேலாண்மை, தெருவிளக்கு, பராமரிப்பு, சாலைகள், பூங்கா, மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்ற அடிப்படை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கலாம். மேற்கண்ட கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று, கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

