/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு நிலம் ஆக்கிரப்பை தடுக்க விட்டிலாபுரத்தில் எச்சரிக்கை பலகை
/
அரசு நிலம் ஆக்கிரப்பை தடுக்க விட்டிலாபுரத்தில் எச்சரிக்கை பலகை
அரசு நிலம் ஆக்கிரப்பை தடுக்க விட்டிலாபுரத்தில் எச்சரிக்கை பலகை
அரசு நிலம் ஆக்கிரப்பை தடுக்க விட்டிலாபுரத்தில் எச்சரிக்கை பலகை
ADDED : ஜன 12, 2025 08:37 PM
புதுப்பட்டினம்: கல்பாக்கம் அருகே, விட்டிலாபுரம் பகுதியில் உள்ள 4 ஏக்கர் புஞ்செய் அனாதீன நிலம் ஆக்கிரமிப்பை தவிர்க்க, வருவாய்த் துறையினர் எச்சரிக்கை பலகை அமைத்து உள்ளனர்.
கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் பகுதியில், புல எண் 382/1ல், 3.75 ஏக்கர் மற்றும் 382/4ல், 400 சென்ட் என, அரசு புஞ்செய் அனாதீனம் நிலம் உள்ளது.
இந்த நிலங்களை, தனியார் ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சி தொடர்வதாக, பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலத்தில், சில அரசியல் அமைப்பினர், விளையாட்டு திடல் அமைக்க வலியுறுத்தியும், இந்நிலத்திற்காக போராட உள்ளதாகவும் கூறி, மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டனர்.
அதைத்தொடர்ந்து, திருக்கழுக்குன்றம் தாசில்தார், கடந்த டிச., 28ம் தேதி, புல தணிக்கை செய்து, ஆக்கிரமிப்பை தடுக்க, வருவாய்த் துறையினரிடம் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, நெரும்பூர் வருவாய் ஆய்வாளர் சங்கிலிபூதத்தான் உள்ளிட்ட அலுவலர்கள், இந்த நிலத்தில் எச்சரிக்கை பலகை அமைத்து உள்ளனர்.
அந்த எச்சரிக்கை பலகையில், 'இந்நிலத்தில் பிறர் அத்துமீறக் கூடாது. அத்துமீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.