/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே கழிவுநீரை கொட்ட வேண்டும்
/
சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே கழிவுநீரை கொட்ட வேண்டும்
சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே கழிவுநீரை கொட்ட வேண்டும்
சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே கழிவுநீரை கொட்ட வேண்டும்
ADDED : மார் 23, 2025 08:10 PM
செங்கல்பட்டு:கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் மட்டுமே, கழிவுநீரை கொட்ட வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டு உள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, அடையாறு பகிங்ஹாம் கால்வாய் மற்றும் நீர்நிலைகளில் கழிவுநீர் கொட்டப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தடுக்க, துாய்மை பாரத இயக்கம் திட்டத்தில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில், கழிவுநீர் ஊர்திகளில், அரசு விதிமுறைகளின்படி, 'ஜி.பி.எஸ்.,' உட்பட அனைத்தும் சரியாக இயங்குவதை, கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா, நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதன் பின், கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் மட்டுமே, கழிவுநீரை ஊர்திகள் வெளியேற்ற வேண்டும். இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.