sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 குடிநீர் குழாய் புதைப்பு பணி: இ.சி.ஆர்., சாலையை தவிர்க்க வேண்டுகோள்

/

 குடிநீர் குழாய் புதைப்பு பணி: இ.சி.ஆர்., சாலையை தவிர்க்க வேண்டுகோள்

 குடிநீர் குழாய் புதைப்பு பணி: இ.சி.ஆர்., சாலையை தவிர்க்க வேண்டுகோள்

 குடிநீர் குழாய் புதைப்பு பணி: இ.சி.ஆர்., சாலையை தவிர்க்க வேண்டுகோள்


ADDED : மார் 10, 2026 05:50 AM

Google News

ADDED : மார் 10, 2026 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்: பேரூர் இ.சி.ஆர்., - திருப்போரூர் சாலை இடையே, குடிநீர் குழாய் புதைக்கப்படுவதால், வாகன ஓட்டிகள், அப்பாதையை தவிர்க்குமாறு போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாமல்லபுரம் அடுத்த, பேரூர், கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் இருந்து, திருப்போரூர் வரை, 3 கி.மீ., சாலை உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக வரும் சென்னை பகுதியினர், நெம்மேலி, பட்டிபுலம் உள்ளிட்ட ஊராட்சிப் பகுதியினர், இச்சாலை வழியாக திருப்போரூர் செல்கின்றனர்.

திருப்போரூர் பகுதியினரும், அவ்வழியாக, கிழக்கு கடற்கரை சாலை பகுதிக்கு வருகின்றனர். தற்போது, பேரூர் கடல்நீரில் குடிநீர் உற்பத்தி ஆலையில் இருந்து, சென்னை புறநகர் பகுதி, குடிநீர் வினியோகத்திற்காக, இச்சாலை பகுதியில், ராட்சத குழாய்கள் புதைக்கும் பணி நடக்கிறது.

குறுகிய அகல சாலை என்பதால், இப்பணிகள் இடையே, வாகனங்கள் செல்ல இயலாது. எனவே, பணிகள் முடியும் வரை, அவ்வழியை தவிர்க்குமாறு போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us