/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு அலுவலகங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
/
அரசு அலுவலகங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
ADDED : நவ 04, 2025 09:42 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், அரசு அலுவலகங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் மதுராந்தகம், வண்டலுார், செய்யூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு, தினமும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த இடங்களில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, எம்.பி., செல்வத்திடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, எம்.பி., தொகுதி நிதியில், மேற்கண்ட அலுவலக பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, தலா 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கலெக்டர் சினேகாவிற்கு, எம் .பி., செல்வம் பரிந்துரை செய்தார்.
இப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதியை விடுவித்து, மதுராந்தகம் நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி கமிஷனர், லத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு, கலெக்டர் சினேகா உத்தர விட்டுள்ளார்.

