/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேலமையூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
/
மேலமையூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
ADDED : நவ 14, 2025 10:18 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலமையூர் ஊராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்குள்ள அக்ஷியா நகரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, தனியார் நிறுவனம் சார்பில், 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.
இப்பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், நேற்று இதன் திறப்பு விழா நடந்தது.
இதில், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்று, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

