/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தண்ணீர் தேவையை குறைக்க புதுயுக்தி 'மல்சிங் சீட்' முறையில் தர்ப்பூசணி
/
தண்ணீர் தேவையை குறைக்க புதுயுக்தி 'மல்சிங் சீட்' முறையில் தர்ப்பூசணி
தண்ணீர் தேவையை குறைக்க புதுயுக்தி 'மல்சிங் சீட்' முறையில் தர்ப்பூசணி
தண்ணீர் தேவையை குறைக்க புதுயுக்தி 'மல்சிங் சீட்' முறையில் தர்ப்பூசணி
ADDED : ஜன 18, 2024 01:39 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் சுற்று வட்டார பகுதியில் வெண்டை, மிளகாய், கத்தரிக்காய், பந்தல் காய்கறிகள் மற்றும் தர்ப்பூசணி என, அனைத்து வகையான காய்கறி பயிர்களை விவசாயிகள் பயிரிடுகின்றனர்.
இப்பயிர்களில் களைகள் அதிகம் வளர்வதால், பயிரின் வளர்ச்சி குறைகிறது. களையை அகற்ற கூடுதலான தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டியுள்ளது.
குறைந்த செலவுடன் களையை கட்டுப்படுத்தவும், கோடை காலத்தில், பயிர்களுக்கு பாய்ச்சும் தண்ணீர் ஆவியாவது முற்றிலும் தடுக்கப்பட்டு, தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்தி மகசூல் எடுக்கும் வகையில், தற்போது 'மல்சிங் சீட்' அமைத்து பயிரிடும் முறையை அதிகமாக விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த 'சீட்' தோட்டக்கலை துறை சார்பில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. மேலும், தனியார் கடைகளிலும் கிடைக்கிறது.
விளை நிலங்களை நன்றாக உழுது, பின் பாத்தி அமைக்கப்பட்ட பகுதிகளில் சீட்டை விரித்து, மண் நிரப்பி, சிறிதளவு துவாரங்கள் செய்து, அதில் காய்கறி விதைகளை விதைக்க வேண்டும்.
பயிர்களின் வகைகளுக்கு ஏற்ப தேவையான இடைவெளி விட்டு, பயிர் செய்கின்றனர். அச்சிறுபாக்கம், ஒரத்தி, வெளியம்பாக்கம், ராமாபுரம், நெடுங்கல் உள்ளிட்ட பகுதிகளில் தர்ப்பூசணி பயிரிடும் விவசாயிகள், 'மல்சிங் சீட்' முறையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.