தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பலவீனமான இரும்பு டவர் அகற்றம்

பலவீனமான இரும்பு டவர் அகற்றம்

பலவீனமான இரும்பு டவர் அகற்றம்


ADDED : நவ 15, 2024 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்பாக்கம்:அணுசக்தி துறையின் கல்பாக்கம் நகரிய பகுதியில், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியினர் ஏராளமானோர் தினசரி வந்து செல்கின்றனர்.

இதையடுத்து, வெளிநபர்கள் குறித்த கண்காணிப்பிற்காக, நகரிய முக்கிய இடங்களில், சிசிடிவி கேமராக்கள் செயல்படுகின்றன. சென்னை அணுமின் நிலைய பேருந்து நிலைய வளாகத்தில், பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இரும்பு டவரில், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது.

தற்போது, இரும்பு டவர் பலவீனமடைந்த நிலையில் இருந்தது. சூறாவளி காற்றில் டவர் சரிந்து சாலையில் விழுந்தால், அவ்வழியே செல்லும் நகரிய பகுதியினர், புதுப்பட்டினம், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ - மாணவியர் ஆகியோருக்கு ஆபத்து ஏற்படும்.

இதை தவிர்க்க, பலவீனமாக இருந்த டவர், நேற்று அகற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us