ADDED : ஆக 14, 2025 11:22 PM
திருப்போரூர்:திருப்போரூர், கரும்பாக்கம் அருகே, பைக் விபத்தில் 'வெல்டர்' உயிரிழந்தார்.
திருப்போரூர் அடுத்த பெருந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாறன், 45; வெல்டர்.
இவர் நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில், 'ஸ்பிௌண்டர்' பைக்கில், திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையில் வீட்டிற்குச் சென்றார்.
கரும்பாக்கம் அரசு பள்ளி அருகே சென்ற போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பைக்கில் எதிர்பாராத விதமாக மோதி, கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு கை, கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உடனே, அங்கிருந்தோர் அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மாறன், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8:00 மணியளவில் உயிரிழந்தார்.
இதுகுறித்து, திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.