/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் ஜமாபந்தியில் ரூ.ஒரு கோடி நலத்திட்ட உதவி
/
திருப்போரூர் ஜமாபந்தியில் ரூ.ஒரு கோடி நலத்திட்ட உதவி
திருப்போரூர் ஜமாபந்தியில் ரூ.ஒரு கோடி நலத்திட்ட உதவி
திருப்போரூர் ஜமாபந்தியில் ரூ.ஒரு கோடி நலத்திட்ட உதவி
ADDED : மே 23, 2025 02:38 AM

திருப்போரூர்:திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில் திருப்போரூர், நெல்லிக்குப்பம், கரும்பாக்கம், கேளம்பாக்கம், மானாம்பதி, பையனுார் ஆகிய ஆறு குறுவட்டங்களுக்கான ஜமாபந்தி, கடந்த 14ம் தேதி துவங்கி நேற்று நிறைவடைந்தது.
இதில் பங்கேற்ற அப்பகுதிவாசிகள் இலவச பட்டா, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர்.
நேற்று நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில், கலெக்டர் அருண்ராஜ் தலைமை வகித்தார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வேலாயுதம், தாசில்தார் நடராஜன், தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் சேகர், பேரூராட்சி தலைவர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 3 லட்சம் மதிப்பில் கொடி காய்கறிகள் பயிரிடுவதற்கான கல் பந்தல் அமைக்கும் பணி ஆணை, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் அருண்ராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார்.
துார்வாரும் பணி
திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய மேலக்கோட்டையூர் ஊராட்சி ஏரியில் குடிமராமத்து பணிகளை, கலெக்டர் நேற்று துவக்கினார். தொடர்ந்து,'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக, ஏரி துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா, திருப்போரூர் பி.டி.ஓ., ஹரிபாஸ்கர் ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.