/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
படூரில் தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
/
படூரில் தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : மார் 16, 2025 01:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க., திருப்போரூர் வடக்கு ஒன்றியம் சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா படூர் ஊராட்சியில் நடந்தது.
திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் தலைமை வகித்தார். படூர் ஊராட்சி தலைவர் தாரா வரவேற்றார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், சிறப்பு பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் 3,000த்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.