/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் அலுவலகம் திறப்பது எப்போது?
/
அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் அலுவலகம் திறப்பது எப்போது?
அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் அலுவலகம் திறப்பது எப்போது?
அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் அலுவலகம் திறப்பது எப்போது?
ADDED : ஏப் 19, 2025 01:27 AM

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது.
அச்சிறுபாக்கம் வட்டாரத்தில் 125 கோவில்கள் அறநிலையத்துறையின் கீழ் உள்ளன.
கோவிலுக்கு சொந்தமான நிலம், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில் உள்ளது. தற்போது, 4.5 ஏக்கர் காலியாக உள்ள இவ்விடத்தில், வார சந்தை நடைபெற்று வருகிறது.
அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில்கள் நிர்வகித்தல், நிலங்கள் ஏலம் விடுதல், ஆக்கிரமிப்புகளை மீட்டு எடுத்தல், அறங்காவலர் நியமனம் செய்தல், கோவில் உண்டியல் காணிக்கை என்னும் பணி மற்றும் கோவில் பூஜாரிகள், அர்ச்சகர்களின் கோரிக்கைகளை, அரசுக்கு தெரிவித்தல் உள்ளிட்ட பணிகளை ஆய்வாளர்கள் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் கோவில் கோப்புகள் மற்றும் ஆவணங்கள், பதிவேடுகளை பராமரித்தல் போன்ற பணிகளுக்கு ஆய்வாளருக்கு என தனியாக கட்டடம் இல்லாமல் இருந்தது.
சந்தை வளாகத்தில், அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகம், 2023 - -24ல், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது. இருப்பினும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டியே உள்ளது.
எனவே, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

