/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் பகுதியில் நெற்பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்
/
செய்யூர் பகுதியில் நெற்பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்
செய்யூர் பகுதியில் நெற்பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்
செய்யூர் பகுதியில் நெற்பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்
ADDED : அக் 27, 2025 11:25 PM
செய்யூர்: செய்யூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் நெற்பயிர்களை நாசம் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியத்தில் 84 ஊராட்சிகள் உள்ளன. 30,000த்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது.
ஏரி, ஆறு, குளம்,கிணறு மற்றும் ஆழ்துளைகிணறு போன்ற நீர் ஆதாரங்கள் வாயிலாக நீர்பாசனம் பெற்று நெல், மணிலா, கரும்பு, எள், உளுந்து, தர்பூசணி ஆகியவை பருவத்திற்கு ஏற்றது போல பயிரிடப்படுகிறது.
இப்பகுதியில் அதிகபடியாக சம்பா பருவத்தில் பொன்னி, பி.பி.டி., குண்டு, எல்.என்.ஆர்., உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்கள் விவசாயம் செய்யப்படுகிறது.
தற்போது சம்பா பருவத்தில் நெல் விவசாயம் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் செய்யூர் சுற்றுவட்டாரப்பகுதிகளான வெடால், சிறுவங்குணம், இரும்பேடு, பெரும்பாக்கம், கீழச்சேரி போன்ற பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் நெற்பயிர்களை நாசம் செய்வதால், பெரும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே வேளாண் மற்றும் வனத்துறையினர் இணைந்து காட்டு பன்றிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் காட்டுப்பன்றிகளால் சேதமடையும் பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

