/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் தொட்டி அருகே தேங்கும் நீரை வெளியேற்ற குழாய் அமைக்கப்படுமா?

ADDED : செப் 25, 2025 12:58 AM

மறைமலை நகர்:மறைமலைநகர் அடுத்த கூடலுாரில், குடிநீர் தொட்டி அருகே தேங்கும் நீரை வெளியேற்ற குழாய் அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறைமலை நகர் நகராட்சி 10வது வார்டு கூடலுார் பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் தேவைக்காக, அரசு பள்ளி அருகில் நகராட்சி சார்பில் சிறிய தொட்டி அமைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த தொட்டியில் தண்ணீர் பிடிக்கும் போது வெளியேறும் உபரி நீர் வெளியே செல்ல, முறையாக குழாய்கள் அமைக்கப்படவில்லை. இதனால், சாலையில் தண்ணீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இந்த தண்ணீரில் கொசு உற்பத்தியாகி, கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.
அத்துடன், இச்சாலையில் தேங்கும் தண்ணீரில் வாகனங்கள் செல்லும் போது, தண்ணீர் பிடிப்பவர்களின் மீது சகதி பட்டு சிரமப்படுகின்றனர்.
எனவே, இந்த பகுதியில் தேங்கும் தண்ணீர் வெளியேற குழாய் அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.