/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூவத்துார் பஜாரில் மழைநீர் வடிகால் அமைக்கப்படுமா?
/
கூவத்துார் பஜாரில் மழைநீர் வடிகால் அமைக்கப்படுமா?
ADDED : ஆக 15, 2025 09:26 PM
கூவத்துார்:கூவத்துார் பஜார் வீதியில், மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூவத்துார் பகுதியில் கிழக்கு கடற்கரைச் சாலை அருகே, பஜார் வீதி உள்ளது.
இந்த பஜார் வீதியின் இருபுறங்களிலும் மளிகைக் கடை, நகைக்கடை, ஜவுளிக்கடை, காய்கறிக் கடை என, நுாறுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
கூவத்துார் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர், தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை வாங்க, இந்த பஜார் வீதிக்கு வந்து செல்கின்றனர்.
மேலும், பஜார் வீதி வழியாக 10க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து, வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
இங்குள்ள 20க்கும் மேற்பட்ட கடைகள், சாலை மட்டத்தை விட தாழ்வான பகுதியில் உள்ளன. இதனால்,, மழைநீர் கடைகளில் புகுந்து பொருட்கள் சேதமடைவதால், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கூவத்துார் பஜார் வீதியில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.