/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தற்காலிக பயணியர் நிழற்குடை அச்சிறுபாக்கத்தில் அமைக்கப்படுமா?
/
தற்காலிக பயணியர் நிழற்குடை அச்சிறுபாக்கத்தில் அமைக்கப்படுமா?
தற்காலிக பயணியர் நிழற்குடை அச்சிறுபாக்கத்தில் அமைக்கப்படுமா?
தற்காலிக பயணியர் நிழற்குடை அச்சிறுபாக்கத்தில் அமைக்கப்படுமா?
ADDED : ஏப் 10, 2025 01:53 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில், தற்காலிக பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கத்தில், சென்னை செல்லும் மார்க்கத்தில், தேசிய நெடுஞ்சாலையோரம் பயணியர் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு உள்ளது.
திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார், புதுச்சேரி உள்ளிட்ட பகுதி பேருந்துகள், இந்த நிறுத்தத்தில் நின்று, பயணியரை ஏற்றிச் செல்கின்றன.
தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், வாகன விபத்துகளும் ஏற்பட்டு, பயணியர் காயமடைந்தனர்.
இதை தவிர்க்கும் விதமாக, 100 அடி துாரத்தில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, பேருந்துகள் நின்று செல்லும் வகையில், தற்காலிகமாக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டது.
இந்த தற்காலிக நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், கோடை வெயில் காரணமாக பயணியர் வெயிலில் அவதிப்படுகின்றனர்.
எனவே, தேசிய நெடுஞ்சாலை துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து, தற்காலிகமாக 'கிரீன்' துணியால் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

