/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தற்காலிகப் பேருந்து நிலையத்தில் கூடுதல் நிழற்குடை அமைக்கப்படுமா?
/
தற்காலிகப் பேருந்து நிலையத்தில் கூடுதல் நிழற்குடை அமைக்கப்படுமா?
தற்காலிகப் பேருந்து நிலையத்தில் கூடுதல் நிழற்குடை அமைக்கப்படுமா?
தற்காலிகப் பேருந்து நிலையத்தில் கூடுதல் நிழற்குடை அமைக்கப்படுமா?
ADDED : நவ 03, 2024 12:22 AM

மதுராந்தகம்:மதுராந்தகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் கீழ் 24 புறநகர் பேருந்துகள், 25 நகர பேருந்துகள் இயங்குகின்றன.
மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சூனாம்பேடு, செய்யூர், லத்துார், இடைக்கழி நாடு, பவுஞ்சூர், அச்சிறுபாக்கம், அனந்தமங்கலம், ஒரத்தி, வேடந்தாங்கல், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நாள்தோறும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.
பயணியரின் நலன் கருதி, தற்காலிக பேருந்து நிலையத்தில் வெயில் மற்றும் மழைக்காலங்களில் நிழற்கூரை அமைக்கப்பட்டது.
அவை போதுமானதாக இல்லாததால், பருவ மழைக்காலங்களில், தற்காலிக பேருந்து நிலையத்தில் தென்னங்கீற்று கொட்டகையில், சிறிய கடைகள் வைத்து வியாபாரம் செய்யும் கடைகளில் பயணியர் தஞ்சம் அடைகின்றனர். பயணியரின் செல்போன் மற்றும் உடமைகள் நனைந்து வீணாகின்றன.
நேற்று, காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின், திடீரென பருவமழை பெய்யத் தொடங்கியது. முன்னெச்சரிக்கையாக குடை எடுத்து வராத பயணியர், செய்வதறியாது திகைத்தனர்.
எனவே, தற்காலிக பேருந்து நிலையத்தில், கூடுதலாக நிழற்கூரை அமைக்க, நகராட்சி நிர்வாகத்தினர், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.