/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றம் - செய்யூர் இடையே முக்கிய தடங்களில் பஸ் இயக்கப்படுமா?
/
திருக்கழுக்குன்றம் - செய்யூர் இடையே முக்கிய தடங்களில் பஸ் இயக்கப்படுமா?
திருக்கழுக்குன்றம் - செய்யூர் இடையே முக்கிய தடங்களில் பஸ் இயக்கப்படுமா?
திருக்கழுக்குன்றம் - செய்யூர் இடையே முக்கிய தடங்களில் பஸ் இயக்கப்படுமா?
ADDED : ஏப் 02, 2025 09:59 PM
திருக்கழுக்குன்றம்:தாலுகா தலைநகரங்கள் திருக்கழுக்குன்றம் - செய்யூர் இடையே, அரசு பேருந்து இயக்க வேண்டுமென, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மாவட்ட தலைநகர் அருகில் உள்ள தாலுகா தலைநகர் திருக்கழுக்குன்றம். மாவட்டத்தின் தெற்கு எல்லை பகுதியில் உள்ள தாலுகா தலைநகர் செய்யூர். மாநிலத்தில், இரண்டு தாலுகா தலைநகரங்கள் இடையே, அரசு பேருந்து இயக்கப்படுவது நடைமுறையில் உள்ளது.
ஆனால், இந்த இரண்டு பகுதிகள் இடையே, தற்போது வரை, நேரடி அரசு பேருந்து போக்குவரத்து இல்லை.
திருக்கழுக்குன்றம் - செய்யூர் இடையே, புதுப்பட்டினம், எல்லையம்மன்கோவில் வழித்தடம்; புதுப்பட்டினம், கூவத்துார் வழித்தடம்; நெரும்பூர், பவுஞ்சூர் வழித்தடம்; வல்லிபுரம், பவுஞ்சூர் வழித்தடம் ஆகிய பகுதிகள் வழியே, அரசு பேருந்து இயக்கலாம்.
இத்தட பகுதிகளில், ஏராளமான கிராமங்கள் உள்ளன. அப்பகுதிகளிலிருந்து, பல்வேறு தேவைகளுக்காக, ஏராளமானோர் வெளியிடங்களுக்கு செல்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன், அப்பகுதி பிரதான சாலைகள், குறுகிய அகலத்துடன் இருந்தன. பெரிய பாலங்களும் இல்லை.
இதனால், பேருந்து இயக்குவதில் சிக்கல் இருந்தது.
தற்போது சாலைகள் விரிவாக்கப்பட்டு, புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இச்சூழலில், இரண்டு தாலுகா தலைநகர் இடையே போக்குவரத்து கருதி, முக்கிய தடங்களிலாவது பேருந்து போக்குவரத்து துவக்க வேண்டுமென, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.

