/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாற்றுத்திறனாளிகள் தேசிய நிறுவன வளாகத்திற்குள் பஸ் வந்து செல்லுமா?
/
மாற்றுத்திறனாளிகள் தேசிய நிறுவன வளாகத்திற்குள் பஸ் வந்து செல்லுமா?
மாற்றுத்திறனாளிகள் தேசிய நிறுவன வளாகத்திற்குள் பஸ் வந்து செல்லுமா?
மாற்றுத்திறனாளிகள் தேசிய நிறுவன வளாகத்திற்குள் பஸ் வந்து செல்லுமா?
ADDED : ஏப் 24, 2025 09:15 PM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடில், ஒன்றுக்கு மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் செயல்படுகிறது.
இந்நிறுவனம், 2005ம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கல்வி மற்றும் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
இந்த நிறுவனம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில், சென்னையிலிருந்து மாமல்லபுரம் மற்றும் கோவளம் இடையே, 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதே போல், தென்மாவட்ட பேருந்துகளும் இவ்வழியாகச் செல்கின்றன.
கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி, இந்நிறுவனம் சார்ந்த பேருந்து நிறுத்தம் உள்ள நிலையில், அங்கு பேருந்துகள் நின்று செல்கின்றன.
ஆனாலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் என அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கி சாலையைக் கடந்து வருதல், மீண்டும் சாலைக்குச் சென்று பேருந்து ஏறுதல் என, பல்வேறு வகையில் சிரமப்படுகின்றனர்.
எனவே, அனைவரின் நலன் கருதி, அனைத்து பேருந்துகளும் நிறுவன வளாகத்திற்கு உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.