/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இ.சி.ஆரில் அபாய வளைவுகள் சாலை தடுப்பு அமைக்கப்படுமா?
/
இ.சி.ஆரில் அபாய வளைவுகள் சாலை தடுப்பு அமைக்கப்படுமா?
இ.சி.ஆரில் அபாய வளைவுகள் சாலை தடுப்பு அமைக்கப்படுமா?
இ.சி.ஆரில் அபாய வளைவுகள் சாலை தடுப்பு அமைக்கப்படுமா?
ADDED : அக் 04, 2024 01:36 AM

சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த வாயலுார் பகுதியில், பழைய கிழக்கு கடற்கரை சாலை கடக்கிறது. சென்னை - புதுச்சேரி இடையே ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இச்சாலையில் கல்பாக்கம் அடுத்த வாயலுார் பகுதியில், செல்லியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில், எதிரில் வரும் வாகனத்தை காண இயலாத குறுகிய வளைவுகள் உள்ளன.
குறிப்பாக, செல்லியம்மன் கோவில் பகுதி வளைவில், வாகனங்கள் நேருக்கு நேராக மோதி, அடிக்கடி விபத்து, உயிரிழப்பு ஏற்படுகிறது. ஒரே விபத்தில் பலர் இறந்தது என, பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டிச் செல்வோர், அபாய வளைவை அறியாமல், எதிரில் வாகனம் வருவதை கண்டு திகைத்து, அவசரமாக பிரேக் போட்டு, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளாவதும் அதிகரிக்கிறது.
மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே, தற்போது நான்கு வழியாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை, அபாய வளைவுகள் தவிர்க்க கருதி, சற்றுத் தொலைவு மேற்கில், வேறு தடம் அமைக்கப்படுகிறது.
இத்தட பணிகள் முடிய தாமதமாகும். மேலும், ஓராண்டிற்கு பழைய சாலையில் தான் வாகனங்கள் கடக்கும் என்பதால், இப்பகுதி குறுகிய வளைவுகளில், கொடூர விபத்துகளை தவிர்க்க, சாலை தடுப்புகளை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்துகின்றனர்.