/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் - சிங்கபெருமாள் கோவில் வரை ஸ்ரீபெரும்புதுார் தடத்தில் பஸ் இயக்கப்படுமா?
/
கிளாம்பாக்கம் - சிங்கபெருமாள் கோவில் வரை ஸ்ரீபெரும்புதுார் தடத்தில் பஸ் இயக்கப்படுமா?
கிளாம்பாக்கம் - சிங்கபெருமாள் கோவில் வரை ஸ்ரீபெரும்புதுார் தடத்தில் பஸ் இயக்கப்படுமா?
கிளாம்பாக்கம் - சிங்கபெருமாள் கோவில் வரை ஸ்ரீபெரும்புதுார் தடத்தில் பஸ் இயக்கப்படுமா?
ADDED : மார் 19, 2024 09:43 PM
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் தடத்தில், திருக்கச்சூர், தெள்ளிமேடு, ஆப்பூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள்உள்ளன.
இந்த கிராம மக்கள், தங்களின் அடிப்படை தேவைகளுக்கு, சிங்கபெருமாள் கோவில் தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதி களுக்கு, தினமும் வந்து செல்கின்றனர்.
அதே போல, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில், மறைமலைநகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல, ஆப்பூர், திருக்கச்சூர், கொளத்துார், சேந்த மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த தடத்தில், செங்கல்பட்டு -- திருவள்ளூர் செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் நான்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது தவிர, தாம்பரத்தில் இருந்து சிங்கபெருமாள் கோவில் -- ஒரகடம்- வழியாக, மீண்டும் தாம்பரம்செல்லும் ஒரே ஒரு மாநகர பேருந்து இயக்கப்படுகிறது.
இந்த தடத்தில், கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு நேரடி பேருந்து இல்லாததால், இந்த பகுதி மக்கள் சிங்க பெருமாள் கோவில் சென்று, அங்கிருந்து மாற்று பேருந்து பிடித்து செல்லும் நிலை உள்ளது.
அதே போல, புறநகர் பகுதிகளில் இருந்து, ஒரகடம் பகுதியில் வேலை செய்வோர், இரண்டு பேருந்து பிடித்து செல்லும் நிலை உள்ளது.
எனவே, இந்த தடத்தில்புதிதாக பேருந்து சேவை துவங்க வேண்டும்என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் தடத்தில், குறித்த நேரத்தில் பேருந்துகள் வராததால்,மாணவ - மாணவியர், வேலைக்கு செல்லும் பெண்கள் உட்பட, பலர் ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த தடத்தில், மகளிர் இலவச பேருந்தும் இயக்கப்படாததால், பயணத்திற்கு சம்பளத்தில் பெரும் தொகை செலவிடும் நிலை ஏற்பட்டு உள்ளது.
- சத்யா, 35,
தனியார் நிறுவன ஊழியர், சிங்கபெருமாள் கோவில்.

