/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கம் மருத்துவமனையில் சேதமான சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?
/
அச்சிறுபாக்கம் மருத்துவமனையில் சேதமான சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?
அச்சிறுபாக்கம் மருத்துவமனையில் சேதமான சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?
அச்சிறுபாக்கம் மருத்துவமனையில் சேதமான சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?
ADDED : ஏப் 04, 2025 02:08 AM

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில், சேதமான சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு 59 ஊராட்சிகள் உள்ளன.
அதில், 1.50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகையின் அடிப்படையில், அச்சிறுபாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் எல்.எண்டத்துார், ஒரத்தி, ராமாபுரம் ஊராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கிராமப் பகுதிகளில் இருந்து அச்சிறுபாக்கத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான புறநோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் நாய், பன்றி மற்றும் கால்நடைகள் உலா வருவதை தவிர்க்கும் வகையில், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.
அதில், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள நீர்வள ஆதாரத் துறையின் கட்டடத்திற்கும், மருத்துவமனைக்கும் இடையே உள்ள சுற்றுச்சுவர், கடந்தாண்டு பெய்த கனமழையின் காரணமாக, ஏற்கனவே விரிசல் ஏற்பட்டு இருந்ததால், இடிந்து விழுந்துள்ளது.
அதன் வழியாக தற்போது நாய், பன்றிகள் மற்றும் கால்நடைகள் மருத்துவமனை வளாகத்தில் உலா வருகின்றன.
அதனால், மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
எனவே, சுற்றுச்சுவர் இடிந்த பகுதியில், மீண்டும் புதிதாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.