/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை நடுவே மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?
/
சாலை நடுவே மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?
ADDED : செப் 15, 2025 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர் நகராட்சி பனங்கொட்டூர் பகுதியில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும், இப்பகுதியில் மனை வாங்கிஉள்ள பலர், வீடு கட்டி குடியேறி வருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள சிமென்ட் சாலை நடுவே, போக்குவரத்திற்கு இடையூறாக மின் கம்பம் உள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் நீடிக்கிறது. எனவே, சாலை நடுவே உள்ள இந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க, மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.மணிகண்டன்,
மறைமலை நகர்.