/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நியாய விலை கடை பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா?
/
நியாய விலை கடை பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா?
ADDED : டிச 23, 2025 05:44 AM

ம துராந்தகம், கருங்குழி பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது.
இதில், ஆறாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் தேவைக்காக, அங்கன்வாடி மையம் அருகே, மதுராந்தகம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 2023 - - 24ம் நிதியாண்டில், 9.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நியாய விலை கடை கட்டப்பட்டது.
கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும், இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல், பூட்டி வைக்கப்பட்டு உள்ளது.
எனவே, மதுராந்தகம் குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து, நியாய விலை கடையை திறந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
- நாகராஜசோழன், கருங்குழி.

