/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சரவண பொய்கை குளத்தின் மின்விளக்கு பழுது நீக்கப்படுமா?
/
சரவண பொய்கை குளத்தின் மின்விளக்கு பழுது நீக்கப்படுமா?
சரவண பொய்கை குளத்தின் மின்விளக்கு பழுது நீக்கப்படுமா?
சரவண பொய்கை குளத்தின் மின்விளக்கு பழுது நீக்கப்படுமா?
ADDED : மார் 16, 2025 08:58 PM
திருப்போரூர்:திருப்போரூரில், புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான கந்தசுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலை ஒட்டி, சரவண பொய்கை குளம் அமைந்துள்ளது. பக்தர்கள் இக்குளத்தில் நீராடி, கந்தபெருமானை வழிபட்டு செல்கின்றனர்.
கடந்த 400 ஆண்டுகளாக வற்றாத நிலையில் உள்ள இந்த திருக்குளம், இப்பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது.
கோவிலைச் சுற்றியுள்ள வீடுகளில் கிணறு, போர்வெல் ஆகியவற்றுக்கு, நிலத்தடி நீர் மட்டத்தை குறையாமல் பார்த்துக் கொள்வதில், இந்த திருக்குளம் முக்கிய பங்காற்றுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு, இக்குளத்தை சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட மின்விளக்கு கம்பம் அமைக்கப்பட்டது.
ஒரே கம்பத்தில் குளத்தின் உள்பக்கமும், வெளிப்பக்க பாதையிலும் மின்விளக்கு அமைத்ததால், போதிய வெளிச்சம் கிடைத்து பக்தர்கள், பொதுமக்களுக்கு வசதியாக இருந்தது.
தற்போது, இந்த குளக்கரையைச் சுற்றி உள்ள சில கம்பங்களில், நீண்ட நாட்களாக மின்விளக்குகள் பழுதடைந்து உள்ளன.
குறிப்பாக குளத்தின் உள்பக்கம் இருள் சூழ்ந்து, பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
இதனால், விபத்து மற்றும் சமூக விரோத செயல் நடக்கும் சூழலும் உள்ளது.
எனவே, குளத்தில் மின்விளக்கை சரிசெய்ய வேண்டும். அல்லது புதிதாக மின் விளக்கு அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.