/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம் ரேஷன் கடை சொந்த கட்டடத்தில் இயங்குமா?
/
மாமல்லபுரம் ரேஷன் கடை சொந்த கட்டடத்தில் இயங்குமா?
ADDED : மார் 20, 2025 08:59 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், தனியாருக்குச் சொந்தமான குறுகிய இடத்தில் இயங்கும் ரேஷன் கடையை, சொந்த கட்டடத்திற்கு மாற்றுமாறு, அட்டைதாரர்கள் வலியுறுத்துகின்றனர்.
மாமல்லபுரத்தில், கங்கைகொண்டான் மண்டபம் தெருவில், ரேஷன் கடை அமைந்துள்ளது. பல தெருக்களைச் சேர்ந்த அட்டைதாரர்கள், இந்த கடையில் ரேஷன் பொருட்கள் வாங்குகின்றனர்.
மழையின் போது, கடை கட்டடத்தில் மழைநீர் ஒழுகியதால், காவல் நிலைய பகுதி தெருவில் உள்ள தனியார் இடத்திற்கு, சில மாதங்களுக்கு முன் கடை மாற்றப்பட்டது.
குறுகிய இடத்தில் இயங்கும் இந்த ரேஷன் கடையில், இடநெருக்கடி உள்ளது. இதனால், அட்டைதாரர்கள் சிரமப்படுகின்றனர்.
சாலையிலிருந்து சற்று உட்புறமாக கடை உள்ளதால், எப்போது கடை திறக்கப்படுகிறது என்பதும் தெரியவில்லை.
கடை ஊழியரும், பொருட்களை சரியாக வழங்கவில்லை என, குற்றச்சாட்டு உள்ளது.
எனவே, இந்த ரேஷன் கடையின் சொந்த கட்டடத்தை பழுது பார்த்து, அங்கு கடையை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு, அட்டைதாரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.