/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிய ரேஷன் கடை கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா?
/
புதிய ரேஷன் கடை கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா?
புதிய ரேஷன் கடை கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா?
புதிய ரேஷன் கடை கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா?
ADDED : அக் 15, 2025 12:27 AM

செய்யூர்:கெங்கதேவன்குப்பத்தில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கெங்கதேவன்குப்பம் கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில், கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ரேஷன் கடை செயல்பட்டு வருகின்றன.
முறையான பராமரிப்பு இல்லாததால், இந்த கட்டடம் சேதமடைந்து உள்ளது.
இதனால் மழைக்காலத்தில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மழைநீரில் நனைந்து வீணாகின்றன.
மேலும், போதிய இடவசதி இல்லாமல், ரேஷன் கடைக்கு வரும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, 2023 -24ம் ஆண்டு, செய்யூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 9.4 லட்சம் ரூபாயில், ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது.
ஆனால், இந்த கட்டடத்திற்கு மின் இணைப்பு இல்லாததால், செயல்படாமல் உள்ளது.
எனவே, வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ரேஷன் கடை புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.