/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொலை வழக்கில் சிறை சென்று திரும்பிய ஊராட்சி தலைவருக்கு மீண்டும் அதிகாரம்?
/
கொலை வழக்கில் சிறை சென்று திரும்பிய ஊராட்சி தலைவருக்கு மீண்டும் அதிகாரம்?
கொலை வழக்கில் சிறை சென்று திரும்பிய ஊராட்சி தலைவருக்கு மீண்டும் அதிகாரம்?
கொலை வழக்கில் சிறை சென்று திரும்பிய ஊராட்சி தலைவருக்கு மீண்டும் அதிகாரம்?
ADDED : ஆக 06, 2025 11:24 PM
வண்டலுார்:தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில் சிறை சென்ற வண்டலுார் ஊராட்சி மன்றத் தலைவருக்கு, மீண்டும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வண்டலுார் அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்டலுார் ஊராட்சியில், 2021ல் நடந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.,வைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி வெற்றி பெற்று, ஊராட்சி மன்ற தலைவரானார்.
இந்நிலையில், 2024, பிப்., 29ல், தி.மு.க., பிரமுகர் ஆராமுதன் கொலை வழக்கில் முத்தமிழ்ச்செல்வி கைது செய்யப்பட்டு, சிறைக்கு சென்று திரும்பினார்.
இதனால், அவரின் அதிகாரம் மாவட்ட கலெக்டரால் பறிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஊராட்சி தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என, பகுதிவாசிகள் எதிர்பார்த்தனர். ஆனால், தேர்தல் நடத்தப்படவில்லை.
ஊராட்சி தலைவர் இல்லாததால், வண்டலுாரின் வளர்ச்சிப் பணிகள் முடங்கி உள்ளதாகவும், விரைவில் இடைத் தேர்தல் நடத்தவும் பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர்.
ஆனால், ஊராட்சி தலைவரின் அதிகாரம் மட்டுமே பறிக்கப்பட்டு உள்ளதாகவும், பதவி பறிக்கப்படவில்லை எனவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், தன் மீதான குற்ற வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்து விட்டதாகவும், ஊராட்சி தலைவருக்கான அதிகாரத்தை மீண்டும் வழங்கும்படியும், மாவட்ட நிர்வாகத்திடம் முத்தமிழ்ச்செல்வி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அந்த பதவிகளுக்கு புதியவர்கள் வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில், முத்தமிழ்ச்செல்விக்கு மீண்டும் ஊராட்சி தலைவருக்கான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், வண்டலுார் பகுதிவாசிகள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.