/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் - நெம்மேலி சாலை சீரமைக்கப்படுமா?
/
திருப்போரூர் - நெம்மேலி சாலை சீரமைக்கப்படுமா?
ADDED : அக் 22, 2025 10:53 PM

தி ருப்போரூர் -- நெம்மேலி சாலையை காலவாக்கம், கண்ணகப்பட்டு, தண்டலம், ஆலத்துார் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இங்குள்ள பகிங்ஹாம் கால்வாய்க்கு இடையே, 3 கி.மீ., செல்லும் இச் சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டதால், இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம்.ஆர்., சாலையை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது.
பிரதான சாலையின் அகலம் குறுகிய நிலையில், ஒருவழி சாலையாக இருப்பதால், எதிர் திசையில் வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியவில்லை.
இதனால், அடிக்கடி விபத்துகள் மற்றும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. மேலும், தற்போது பெய்து வரும் மழையால் சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. எனவே, இச் சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும்.
- கண்ணதாஸ், கண்ணகப்பட்டு.

