/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூர் பஜாரில் குடிநீர் வசதி வருமா?
/
சித்தாமூர் பஜாரில் குடிநீர் வசதி வருமா?
ADDED : ஜன 02, 2025 02:41 AM
சித்தாமூர் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம், அரசு பள்ளிகள், வேளாண் அலுவலகம், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
பஜார் பகுதியில் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் சரவம்பாக்கம், கன்னிமங்கலம், வாலோடை உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளியூர்களுக்குச் செல்ல, சித்தாமூர் பஜார் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.
இதனால், தினசரி அதிகமானோர் சித்தாமூர் பஜார் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இங்கு குடிநீர் வசதி இல்லை. இதனால், பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பஜாரின் மையப்பகுதியில் உள்ள சாலை சந்திப்பில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சு.சத்யா,
சாமந்திபுரம்.