/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மெய்யூரில் நெற்களம் அமையுமா? விபத்து அபாயத்தில் விவசாயிகள்
/
மெய்யூரில் நெற்களம் அமையுமா? விபத்து அபாயத்தில் விவசாயிகள்
மெய்யூரில் நெற்களம் அமையுமா? விபத்து அபாயத்தில் விவசாயிகள்
மெய்யூரில் நெற்களம் அமையுமா? விபத்து அபாயத்தில் விவசாயிகள்
ADDED : மார் 11, 2024 04:39 AM

சதுரங்கப்பட்டினம், : கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் மெய்யூர் பகுதியில், பல நுாறு ஏக்கர் பரப்பில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பொன்னி, பாப்பட்லா உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன.
பெரும்பாலான விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் நெல்லை தனியார் அரிசி ஆலைகளுக்கு விற்கின்றனர். அறுவடை காலத்தில், நெல்லை உலர்த்துவதற்கும், உலர்த்தப்பட்ட நெல்லை மூட்டையில் நிரப்பவும் நெற்களம் இல்லை.
இதனால், வேறு வழியில்லாமல் சதுரங்கப்பட்டினம் - செங்கல்பட்டு சாலையில், விபத்து அச்சத்துடன், நெல்லை உலர்த்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
சதுரங்கப்பட்டினம் மெய்யூரில், இதுவரை நெற்களம் அமைக்கப்படவில்லை. நெற்களம் அமைக்க ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
நெல்லை சாலையில் உலர்த்தி, சாக்குப் பையில் நிரப்புகிறோம். கல்பாக்கம் பகுதி என்பதால், வாகனங்கள் அதிகம் செல்கின்றன. விபத்து அச்சத்தில் வேலை செய்து வருகிறோம்.
சாலையில் நெல் குவித்து மறிப்பதாக, வண்டி டிரைவர்கள் எங்களை திட்டிவிட்டு செல்கின்றனர். நேற்று, காஸ் சிலிண்டர்கள் ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று இங்க கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிலிண்டர்கள் வெடித்திருந்தால், நெல்லை உலர்த்து பணியில் ஈடுபட்டிருந்த பலர் உயிரிழந்திருப்பர். எனவே, அரசு நெற்களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

