/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேலை பார்த்த நிறுவனத்தில் 41 'ஏசி' திருடிய பெண் கைது
/
வேலை பார்த்த நிறுவனத்தில் 41 'ஏசி' திருடிய பெண் கைது
வேலை பார்த்த நிறுவனத்தில் 41 'ஏசி' திருடிய பெண் கைது
வேலை பார்த்த நிறுவனத்தில் 41 'ஏசி' திருடிய பெண் கைது
ADDED : அக் 09, 2025 10:12 PM
செங்கல்பட்டு:வேலை பார்த்த நிறுவனத்தில் 41 'ஏசி'க்களை திருடிய முன்னாள் ஊழியர் மற்றும் அவரது நண்பரை, போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில், தனியார் ஷோரூம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவன மேலாளர் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகார்:
ஊரப்பாக்கம் அடுத்த ஆதனுார் பகுதியைச் சேர்ந்த மகரூன் அயன், 32, என்ற பெண், கடந்த சில மாதங்களுக்கு முன் எங்கள் நிறுவனத்தில் வேலை பார்த்த போது, தவறாக கணக்கு எழுதி, நிறுவனத்தில் இருந்து 41 'ஏசி'க்களை திருடிச் சென்றார்.
கணக்குகளை தணிக்கை செய்த போது இது தெரிந்தது. இதுகுறித்து கேட்ட போது, அதற்குரிய பணத்தை திரும்ப தருவதாக மகரூன் அயன் கூறினார். ஆனால், இதுவரை பணத்தை தரவில்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, புகாரில் கூறியிருந்தார்.
இது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் மகரூன் அயன், தன் நண்பரான செங்கல்பட்டு அடுத்த நெம்மேலியைச் சேர்ந்த மதன குமார், 43, என்பவருடன் சேர்ந்து, 41 'ஏசி'க்களை திருடி விற்பனை செய்தது தெரிந்தது.
மேலும், தன் நெருங்கிய நண்பர்கள் சிலரிடமும், மகரூன் அயன் பணம் வாங்கி ஏமாற்றியது தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.