/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு பேருந்து மோதி பெண்ணின் கால் முறிவு
/
அரசு பேருந்து மோதி பெண்ணின் கால் முறிவு
ADDED : செப் 07, 2025 10:35 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் பெண் மீது அரசு பேருந்து மோதியதில் கால் முறிவு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி இந்திரா, 53. நேற்று முன்தினம் மாலை சென்னை மதுர வாயலில் உள்ள தன் மகள் வீட்டிற்கு சென்று விட்டு வேடந்தாங்கல் வந்து கொண்டிருந்தார்.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் உள்ளே நடந்து வந்த போது பின்னால் வந்த தடம் எண் 82.சி அரசு பேருந்து இந்திரா மீது மோதி வலது காலில் டயர் ஏறியது. அங்கிருந்தோர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காலில் முறிவு ஏற்பட்ட இந்திராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.