/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள் கோவில் மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின் பொறியாளர் இல்லாமல் பணிகள் பாதிப்பு
/
சிங்கபெருமாள் கோவில் மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின் பொறியாளர் இல்லாமல் பணிகள் பாதிப்பு
சிங்கபெருமாள் கோவில் மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின் பொறியாளர் இல்லாமல் பணிகள் பாதிப்பு
சிங்கபெருமாள் கோவில் மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின் பொறியாளர் இல்லாமல் பணிகள் பாதிப்பு
ADDED : ஏப் 17, 2025 07:49 PM
சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் மின் வாரிய அலுவலகம் சிங்கபெருமாள் கோவில் பொது நுாலகம் எதிரில் உள்ள தனியார் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலக கட்டுப்பாட்டில் சிங்கபெருமாள் கோவில், செங்குன்றம், கருநிலம், கொண்ட மங்கலம், ஆப்பூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலை, விவசாயம், வர்த்தக நிறுவனங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த அலுவலகத்தில் கடந்த 2023 மே மாதம் முதல் உதவி மின் பொறியாளர் இல்லாததால் பல்வேறு பணிகள் பாதிப்படைந்து வருவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
செங்கல்பட்டு டவுன் மின்வாரிய அலுவல உதவி மின் பொறியாளர் சிங்கபெருமாள் கோவில் மின்வாரிய அலுவல பொறுப்பு மின் உதவி பொறியாளராக இருந்து வந்த நிலையில், ஆறு மாதங்களுக்கு முன் வேறு துணை மின் நிலையத்திற்கு விருப்ப பணியிட மாற்றம் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
பணியிட மாற்றம் செய்யப்பட்டும் அவரை இங்கு பணியில் இருந்து விடுவிக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் அந்த உதவி மின் பொறியாளர் கடந்த சில நாட்களுக்கு முன் 25 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்று விட்டார்.
தற்போது செட்டிபுண்ணியம் மின் வாரிய உதவி மின் பொறியாளர் சிங்கபெருமாள் கோவில் மின் வாரிய அலுவலகத்திற்கு பொறுப்பு மின் உதவி பொறியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து மின் நுகர்வோர் கூறியதாவது:
கடந்த 2023ம் ஆண்டு இந்த அலுவலகத்திற்கு உட்பட்ட ஆப்பூர், சிங்கபெருமாள் கோவில் பகுதிகளில் புறம்போக்கு நிலங்களில் உள்ள வீடுகளுக்கு முறைகேடாக மின் இணைப்பு வழங்கப்பட்டது தொடர்பாக உதவி மின் பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அதன் பின் மறைமலை நகர், செட்டிபுண்ணியம், செங்கல்பட்டு டவுன் மின்வாரிய அலுவலக உதவி பொறியாளர்கள் பொறுப்பு உதவி பணியாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.
நிரந்தர உதவி மின் பொறியாளர் இல்லாததால் புதிய மின் மீட்டர் பெறுதல், மின்கம்பம் மாற்றியமைப்பு போன்ற பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகின்றன.
புதிதாக கட்டப்படும் வீடுகள், வணிக கட்டங்கள் கட்டுமான பணிகளுக்கு தற்காலிக மின்இணைப்பு பெற முடியவில்லை. பல கிராமங்களில் மின் கம்பிகள் மீது கொடிகள், மர கிளைகள் படர்ந்து காணப்படுகிறது.
இதனால் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு முதியவர்கள் பெண்கள், குழந்தைகள் என பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மாலை மற்றும் இரவு நேரங்களில் மின் தடை ஏற்படும் போது ஊழியர்கள் உடனடியாக வந்து சரி செய்யாமல் அடுத்த நாளே வருகின்றனர். எனவே உதவி மின் பொறியாளரை நியமிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.