/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுற்றுலா பயணியர் விடுதிக்கு வேலி அமைக்கும் பணி துவக்கம்
/
சுற்றுலா பயணியர் விடுதிக்கு வேலி அமைக்கும் பணி துவக்கம்
சுற்றுலா பயணியர் விடுதிக்கு வேலி அமைக்கும் பணி துவக்கம்
சுற்றுலா பயணியர் விடுதிக்கு வேலி அமைக்கும் பணி துவக்கம்
ADDED : ஆக 21, 2025 02:06 AM

திருப்போரூர்:நம் நாளிதழ் செய்தி எதிரோலியாக, திருப்போரூரில் உள்ள சுற்றுலா பயணியர் விடுதி வளாகத்திற்கு முதற்கட்டமாக, பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி துவங்கி உள்ளது.
திருப்போரூர் ரவுண்டானா அருகே, பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பயணியர் தங்கும் விடுதி மற்றும் அலுவலகம் அமைந்துள்ளன.
திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சிப் பணிகளை பார்வையிட வரும் அதிகாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணியர், இங்கு சில மணி நேரம் தங்கி ஓய்வெடுத்துச் செல்வது வழக்கம்.
ஆனால், மேற்கண்ட பயணியர் விடுதி, சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது.விடுதியைச் சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இந்த விடுதி மது அருந்தும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளது.
பொதுப்பணித் துறையினர் கவனம் செலுத்தி, பயணியர் தங்கும் விடுதியை புதுப்பித்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும், வளாகம் முழுதும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து முதற்கட்டமாக, சுற்றுலா பயணியர் தங்கும் விடுதி வளாகத்திற்கு, பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி துவங்கி உள்ளது.