/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் கருத்தடை கூடம் அமைக்கும் பணிகள்.. மந்தம் . நாய்கள் பெருக்கம் அதிகரிப்பால் மக்கள் பாதிப்பு
/
செங்கையில் கருத்தடை கூடம் அமைக்கும் பணிகள்.. மந்தம் . நாய்கள் பெருக்கம் அதிகரிப்பால் மக்கள் பாதிப்பு
செங்கையில் கருத்தடை கூடம் அமைக்கும் பணிகள்.. மந்தம் . நாய்கள் பெருக்கம் அதிகரிப்பால் மக்கள் பாதிப்பு
செங்கையில் கருத்தடை கூடம் அமைக்கும் பணிகள்.. மந்தம் . நாய்கள் பெருக்கம் அதிகரிப்பால் மக்கள் பாதிப்பு
ADDED : நவ 27, 2025 11:48 PM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி உரக்கிடங்கு வளாகத்தில், நாய்கள் கருத்தடை மைய கட்டடம் கட்டும் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த கருத்தடை மைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு நகராட்சியில், 5,000க்கும் மேற்பட்ட தெருநாய்கள், பராமரிப்பின்றி தெருக்களில் சுற்றித் திரிகின்றன. இவற்றில் பல நாய்களுக்கு சொறி பிடித்து, 'ரேபிஸ்' நோயால் பாதிக்கப்பட்டு உள்ளன. நோய் முற்றி வெறி பிடிக்கும் போது இந்த நாய்கள், பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை துரத்தி துரத்தி கடித்து வருகின்றன.
நாய்க்கடி பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால், அவர்களுக்கும் ரேபிஸ் நோய் பாதிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில், நாய்க்கடிக்கான தடுப்பூசிகள் இலவசமாக போடப்படுகின்றன.
அத்துடன், நாய்க்கடிக்கு மூன்று முறை ஊசி போட வேண்டும் என, டாக்டர்கள் கூறுகின்றனர்.
அதன் பின், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர், தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். நாய்க்கடியால் கடும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதால், நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரு நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை அரங்கம், செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டது.
இந்த அரங்கில், கடந்த 2022ம் ஆண்டு, தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய, தனியார் நிறுவனத்திற்கு 'டெண்டர்' விடப்பட்டது. அதன் பின், தனியார் அமைப்பினர் தெருக்களில் சுற்றித்திரிந்த நாய்களைப் பிடித்து, கருத்தடை அறுவை சிகிச்சை அரங்கத்தில், அவற்றுக்கு கருத்தடை செய்தனர்.
இந்த சிகிச்சையின் போது, 50க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்தன. அதன் பின், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து, கருத்தடை செய்யும் நடவடிக்கையை, நகராட்சி நிர்வாகம் கைவிட்டது.
இப்பணிகளை கைவிட்டதால், நகராட்சி பகுதியில் மீண்டும் தெரு நாய்கள் வளர்ச்சி அதிகரித்துள்ளது. கட்டுப்பாடின்றி தெருக்களில் சுற்றித்திரியும் நோய் தொற்றுள்ள நாய்கள் முதியவர்கள், சிறுவர்களை துரத்திக் கடித்துவிடுகின்றன.
இதுமட்டும் இன்றி, தெருக்களில் கூட்டமாக நாய்கள் தறுமாறாக செல்லும் போது, இருசக்கர வாகன ஓட்டிகள் மோதி அவற்றின் மீது மோதி விபத்துகளில் சிக்குகின்றனர்.
எனவே, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன் பின், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், செங்கல்பட்டு நகர் 21வது வார்டில் உள்ள ராமபாளையம் பகுதியில், நாய்கள் கருத்தடை கூடம் அமைக்க, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, நகராட்சி ஒப்புதல் வழங்கியது.
இதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, செங்கல்பட்டு நத்தம் பகுதியில் உள்ள, நகராட்சி உரக்கிடங்கு பகுதியில் நாய்கள் கருத்தடை கூடம் அமைக்க, இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன் பின், கருத்தடை கூடம் கட்டுமான பணிகள் கடந்தாண்டு துவங்கின. ஆனால், இப்பணிகள் தொடர்ந்து மந்தமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், நாய் கருத்தடை கூடம் பகுதியில் கூடுதல் பணிகள் மேற்கொள்ள, பொது நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, நகராட்சி ஒப்புதல் வழங்கி உள்ளது.
அந்த வகையில், இப்பணிக்கு நிதி மட்டும் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், பணிகள் மந்தமாக நடைபெற்று வருவது, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, நாய்கள் கருத்தடை மையம் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் கலெக்டர் சினேகா நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நாய்கள் கருத்தடை பணிகளை கைவிட்டதால், நகராட்சி பகுதியில் மீண்டும் தெரு நாய்கள் வளர்ச்சி அதிகரித்துள்ளது. கட்டுப்பாடின்றி தெருக்களில் சுற்றித்திரியும் நோய் தொற்றுள்ள நாய்கள் முதியவர்கள், சிறுவர்களை துரத்திக் கடித்து விடுகின்றன.

