/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷன் கடைக்கு புது கட்டடம்: வண்டலுாரில் பணிகள் வேகம்
/
ரேஷன் கடைக்கு புது கட்டடம்: வண்டலுாரில் பணிகள் வேகம்
ரேஷன் கடைக்கு புது கட்டடம்: வண்டலுாரில் பணிகள் வேகம்
ரேஷன் கடைக்கு புது கட்டடம்: வண்டலுாரில் பணிகள் வேகம்
ADDED : நவ 17, 2025 07:49 AM

வண்டலுார்: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, வண்டலுாரில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் வேகமெடுத்து உள்ளன.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுாரில் உள்ள, 15 வார்டுகளில், 40,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, ஆறு ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன.
இதில், 12வது வார்டு, 8வது பிரதான சாலையில், வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் '168பிஎன்' என்ற எண் கொண்ட ரேஷன் கடையில், உரிய வசதிகள் இல்லை.
குறிப்பாக, உணவுப் பொருட்கள் இருப்பு வைப்பதற்கும், மக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் செல்வதற்கும், போதிய இடவசதி இல்லை.
இதனால், கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து, 13வது வார்டில் உள்ள பாரதி பூங்கா அருகே, ரேஷன் கடைக்கு கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேலும், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் இந்த புதிய ரேஷன் கடை கட்ட, 13.43 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்ட நிலையில், பணிகள் மந்தமாக நடைபெற்று, பாதியில் நிறுத்தப்பட்டன.
இதனால், 12 மாதங்களைக் கடந்தும், கட்டுமான பணிகள் நிறைவடையாமல் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டனர்.
இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, தற்போது கட்டுமான பணிகள் வேகமெடுத்து உள்ளன.

