ADDED : மார் 11, 2026 05:12 AM
அ நிறம் | அளவு
திருப்போரூர்: மின்சாரம் பாய்ந்து அசாம் மாநில வாலிபர் பலியானார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஹதத் சிக்டன், 19. இவர் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, கேளம்பாக்கம் அருகே சிறுசேரி தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு கிடந்த மின் ஒயரை காலால் தள்ளிவிட்டபோது எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
