/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொழிலாளி மயங்கி விழுந்து பலி
/
தொழிலாளி மயங்கி விழுந்து பலி
ADDED : ஜன 01, 2026 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த ஆலத்துார் சிட்கோ வளாகத்தில் தனியார் தொழிற்சாலை உள்ளது.
நேற்று முன்தினம் மாலை, மணலியில் இருந்து, தொழிற்சாலைக்கு லோடு வாகனத்தில் சிலிண்டர்கள் வந்தன. லோடு வாகனத்தில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி புதிய நாப்பாளையத்தை சேர்ந்த சரவணன், 50, என்பவர் வந்தார். காலி சிலிண்டரை ஏற்றியபோது, திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
திருப்போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

