/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொழிலாளி கொலை வழக்கு தி.மு.க., -- எம்.பி., ஆஜராக உத்தரவு
/
தொழிலாளி கொலை வழக்கு தி.மு.க., -- எம்.பி., ஆஜராக உத்தரவு
தொழிலாளி கொலை வழக்கு தி.மு.க., -- எம்.பி., ஆஜராக உத்தரவு
தொழிலாளி கொலை வழக்கு தி.மு.க., -- எம்.பி., ஆஜராக உத்தரவு
ADDED : ஜன 30, 2024 10:09 PM
செங்கல்பட்டு:கடலுார் தி.மு.க., -- எம்.பி., ரமேஷ், 50. இவருக்கு, சொந்தமான முந்திரி ஆலையில் பணிபுரிந்த தொழிலாளி கோவிந்தராசு என்பவர், 2021ம் ஆண்டு, செப்டம்பரில் கொலை செய்யப்பட்டார்.
கடலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேஷ் மற்றும் முந்திரி ஆலை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை, விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி., போலீசார், ரமேஷ் உள்ளிட்டவர்கள் மீது, கடலுார் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை கடலுார் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இருந்து, செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து, செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு, முதன்மை மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தி.மு.க., -- எம்.பி., ரமேஷ், 50, வினோத், 30, தங்கவேல், 48, சுந்தர்ராஜ், 26, ஆகியோர் ஆஜராகவில்லை.
அல்லாபிச்சை, 41, நடராஜன், 31, ஆகியோர் ஆஜராகினர். அதனால், வழக்கை வரும் பிப்., 8ம் தேதிக்கு ஒத்திவைத்து, தி.மு.க., -- எம்.பி., ரமேஷ் உள்ளிட்டோர் ஆஜராக வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.