தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் போராட்டம்


ADDED : செப் 02, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 06:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்போரூர், செப். 3–

ஆலத்துார் சிட்கோ தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள், ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்போரூர் அடுத்த ஆலத்துார் சிட்கோ எனும் சிறுதொழில் வளர்ச்சி கழக, வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.

இதில், அரசின் ‘டாம்கால்’ சித்த மருந்து தயாரிப்பு நிறுவனமும் உள்ளது. இந்நிறுவனத்தில், ஒப்பந்த அடிப்படையில், பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், 2026 ஏப்ரல் மாதம் முதல் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, 832 ரூபாயை நிர்வாகம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிது. இதை கண்டித்து பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நேற்று வேலையை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின், தொழிலாளர் துணை ஆணையர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினார்.

அப்போது, வரும் 10ம் தேதிக்குள் ஊதிய உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து,

தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us