ADDED : நவ 09, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கபெருமாள் கோவில்: பாம்பு கடித்து வாலிபர் உயிரிழந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சமித் டே, 27. இவர் சிங்கபெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 3ம் தேதி இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்த போது கட்டு விரியன் பாம்பு சமித் டேவின் வலது காதில் கடித்தது.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கா க சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிங்கபெருமாள் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

