/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி
/
பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி
ADDED : அக் 30, 2025 10:30 PM
செங்கல்பட்டு:  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 35. இவர், மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில், விற்பனை பிரிவில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று மதியம் 1:30 மணியளவில் கார்த்திக், 'பஜாஜ் விக்ராந்த்' பைக்கில், மகேந்திரா சிட்டியில் இருந்து மதுராந்தகம் நோக்கி, ஜி.எஸ்.டி., சாலையில் சென்றார்.
செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம்பள்ளி அருகே, போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்றிருந்தார். அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, கார்த்திக் பைக்கின் பின்பக்கம் மோதியது.
இதில் கார்த்திக், சாலையோர இரும்பு தடுப்புக்கும், பேருந்துக்கும் இடையே சிக்கி உயிரிழந்தார். அரசு பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர், மா ற்றுப் பேருந்தில் தப்பிச் சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து, தப்பிச் சென்ற அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தேடி வருகின்றனர்.

