ADDED : ஜூன் 15, 2025 08:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:திருப்பூர் மாவட்டம், ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் விஜய், 23. பெங்களூருவில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
நேற்று, சென்னையில் இருந்து, அவருக்கு சொந்தமான ராயல் என்பீல்டு இருசக்கர வாகனத்தில் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மதுராந்தகம் அருகே மோச்சேரி பகுதி சென்னை - -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில், சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு கம்பியில், தலைப்பகுதி அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற மதுராந்தகம் போலீசார், உடலை கைப்பற்றி மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.