ADDED : அக் 04, 2025 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை:ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் குமரேசன், 30; வெல்டர். இவர், மனைவி மற்றும் ஒரு மாத கைக்குழந்தையுடன், படப்பை அருகே உள்ள வஞ்சுவாஞ்சேரியில், வாடகை வீட்டில் தங்கி, ஒரகடத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில், தனது 'பஜாஜ் பல்சர்' பைக்கில், படப்பை அருகே ஆரம்பாக்கத்தில் இருந்து, வண்டலுார் --- வாலாஜாபாத் சாலையில் சென்றார்.
அப்போது, வேகமாக சென்றதால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்த குமரேசன், சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.